சுகாதார சீர்கேடு

Update: 2024-04-21 09:00 GMT

சாமியார்மடத்தில் தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் சேகரிக்கப்படும் கழிவுகள், குப்பைகள் அருகில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. ஆனால், அவற்றை முறையாக அகற்றுவதில்லை. மாறாக குப்பைகளை தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நச்சுப்புகை பரவி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக சந்தைக்கு வரும் மக்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்