பெருமாநல்லூர் நம்பியூர் ரோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருமண மண்டபத்தையொட்டி குப்பை கொட்டுகிறார்கள். இப்படி குப்பையை கொட்டுவதால் அதன் அருகில் பட்டறை வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இங்கு குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.