ஈங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. மேலும் பாலித்தீன் கவருக்கு தீ வைத்து எரிக்கப்படுகிறது. ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட வாழை இலை கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. உடனே குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?