குப்பை தொட்டி அகற்றப்படுமா?

Update: 2024-02-11 13:37 GMT

சென்னை வேளச்சேரி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இதன் நுழைவு வாயில் முன்பு மாநகராட்சி சார்பில் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டியில் கோழி இறைச்சி, மீன் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் பூங்கா முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பூங்காவிற்கு வரும் சிறுவர்களுக்கு, வயதானோர் என அனைவருக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பை தொட்டியை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்