குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-28 17:49 GMT

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கலைஞர் கருணாநிதி அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பிவழிகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்புள்ளது. பொதுமக்கள் முகம்சுழித்தபடி இந்த வழியாக செல்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி குப்பைகளை தினமும் எடுத்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

- ஊர்பொதுமக்கள், வாழப்பாடி.

மேலும் செய்திகள்