கோபி பாரியூர் ரோட்டில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் ரோட்டின் ஓரமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் காணப்படுகிறது. மேலும் காற்று அடிக்கும்போது அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களின் கண்ணில் குப்பை தூசி பட்டு விபத்து ஏற்படுகிறது. உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?