நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2024-01-07 12:18 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பாலாறு உள்ளது. இந்த ஆற்றில் கோழி கழிவுகள், கோழி முட்டை ஓடுகள் , குப்பைகள் என கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், தண்ணீர் அசுத்தமடைகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்