குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2023-12-17 12:53 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஐயப்பந்தாங்கல் - பெரியகொளுத்துவாஞ்சேரி ரோட்டில் ( முருகன் கோயில்) அருகில் உள்ள நிலத்தில் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், அதிகமான மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை அகற்ற வேண்டும். மேலும், குப்பையை அந்த பகுதியில் கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்