தர்மபுரி நகரின் மேற்கு பகுதியில் பிடமனேரி அமைந்துள்ளது. இந்த ஏரி கரை ஓரத்தில் குப்பைகள், கழிவு பொருட்கள் அதிக அளவில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இந்த பகுதியில் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?