நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் இடதுபுறத்தில் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைகள், கழிவுகளை வீசி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தின் இடதுபுறம் கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பதாகை மற்றும் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.