ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் பேரூராட்சி தேவேந்திர நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளில் பெரும்பாலும் பாலீத்தீன் பைகள் அதிக அளவில் குவிந்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வு கிடைக்குமா?