கூடலூர் நகரின் மையப் பகுதியில் ஒட்டாண் குளம் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் 18-ம் கால்வாய் வழியாக கொண்டு வந்து இந்த குளத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் குளத்தின் கரையோர பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நீர் மாசடைந்து சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.