திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் வடிகாலை தூர் வாரப்படாமல் மழைத்தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகால் பாதையில் உள்ள அடைப்புகளை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்.