சுகாதாரக்கேடு?

Update: 2022-07-14 14:33 GMT

கோபி அருகே உள்ள கரட்டூரில் இருந்து பாரியூர் செல்லும் ரோட்டில் 8 இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் காற்று வீசும்போது குப்பையில் இருந்து தூசுகள் பறந்து வந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்