பரமத்திவேலூர் அருகே கரட்டூர் கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவா் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மைதானம் முழுவதும் குப்பையாக காட்சி அளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இந்த மைதானம் சுற்றிலும் வேலி அமைக்க தூண்கள் நடப்பட்டன. ஆனால் கம்பி வலை கட்டப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சிறுவர் விளையாட்டு மைதானத்தை பராமரித்து மேலும் சிறுவர் ஊஞ்சல், சறுக்கல், தண்டால் பைப்புகள் என அனைத்தும் சரி செய்து தர வேண்டும்.