வாலாஜாவில் உள்ள நார்வா சந்துகள் மோசமான நிலையில் உள்ளன. நெடுஞ்சாலையையொட்டி இருக்கும் திருமலை முதல் தெரு பின்பக்கமுள்ள நார்வா சந்து, கச்சாலன் தெரு, புஜனராவ் தெரு உள்பட பல சந்துகள் அசுத்தமாக உள்ளன. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, இரவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு நார்வா சந்துகளை தூய்மைப்படுத்தி கொசு மருந்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-கபிலன், வாலாஜா.