வாலாஜாவை அடுத்த தேவதானம் கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்ரோல் பங்க் அருகில் தினமும் அதிகளவில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்தக் கழிவுகளை நாய்கள், பன்றிகள் கிளறி சாப்பிடுவதால் அப்பகுதியில் உள்ள சாலையில் சிதறி கிடக்கின்றன. கோழி இறகுகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகங்களில் விழுகிறது. அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணியம், வாலாஜா.