வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு சன்னதி தெரு பி.எஸ்.என்.எல். ஆபீஸ் அருகில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் இருப்பதால், அவைகள் ரோட்டில் பறந்து செல்கின்றன. கால்நடைகள் குப்பைகளை கிளறி விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-தேவராஜ், மகாலிங்கம், வந்தவாசி.