வேலூர் பழைய அரசு மருத்துவமனை தெருவில் இருந்து பில்டர் பெட் ரோடு செல்லும் குறுக்கு தெருவில், குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தத் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக இல்லாத காரணத்தால், ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சிலர் இந்தத் தெருவில் இயற்கை உபாதைகளை கழிப்பது வாடிக்கையாகி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. நகரின் சுகாதாரத்தை காக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.