வேலூர் அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை அருகே பழைய மீன் மார்க்கெட் உள்ளது. அந்த மீன் மார்க்கெட் பயன்பாடற்றுக் கிடக்கிறது. இதனால் அதன் நுழைவு வாயில் பகுதியில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி காணப்படுகிறது. எனவே சுகாதாரச் சீர்கேடாக உள்ள பழைய மீன் மார்க்கெட்டை சுத்தம் செய்து பயன்பாடுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலவன், வேலூர்.