ராணிப்ேபட்டை மாவட்டம் அரப்பாக்கம் பகுதியில் இருந்து பூட்டுத்தாக்கு செல்லும் சாலையோரம் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசுகிறார்கள். அந்த குப்பைகளை அப்பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகள் கிளறி சாலையில் போடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குவியும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோகுல், அரப்பாக்கம்.