அரக்கோணம் ஸ்டேட் பாங்க் எதிரில் ரெயில் நிலையம் செல்லும் கூட்ஸ் ஷெட் ரோடு பள்ளமாகி, மழைநீர் தேங்கி, சாலை ஓரங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. சாலையோரம் சேதமான தள்ளுவண்டிகள் உள்ளன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அதே பகுதியில் சோளிங்கர் ரோடு பிரதான சாலையோரமும் குப்பைகள் வீசப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோமல்குமார், அரக்கோணம்.