திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் பெரிய ஏரி மீது 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. அந்தச் சாலையோரமும், ஏரிக்கரையையொட்டியும் குப்பைகளும், கழிவுப் பொருட்களும் வீசப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி நீர் மாசுபடுகிறது. குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.கே.சனாவுல்லாஹ், திருப்பத்தூர்.