குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்

Update: 2022-08-14 11:43 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். கிரிவலத்துக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாநுழைவு வாயிலில் இருந்து காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை ஆங்காங்கே குப்பைகள் கிடகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்.

-லிங்கம், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்