சோளிங்கர் அடுத்த கொடைக்கல் கிராமத்தில் இருந்து கொடைக்கல் காலணிக்கு செல்லும் சாலையில் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்ட ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இந்தத் தொட்டியை ஊராட்சி சார்பில் முறையாக பராமரிக்கப்படாததால் குப்பைத்தொட்டியைச் சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. அந்தக் குப்பைத்தொட்டி துருப்பிடித்து சேதம் அடைந்துள்ளது. ஊராட்சி நிர்வாகம் குப்பைத்தொட்டியை பராமரித்து பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நரசிம்மன், சோளிங்கர்