திருவண்ணாமலையில் கிரிவலம் என்பது பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபத்தில் இருந்து அண்ணா நுழைவு வாயில் பகுதி வரை முறையாக குப்பைகள் அகற்றப்படாமல், அசுத்தமாக உள்ளது. கிரிவலத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். கிரிவலப்பாதை அசுத்தமாக காட்சி அளிப்பதால் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
-ராஜன், திருவண்ணாமலை.