வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பெரும்பாலான வார்டுகளில் வாரம் இருமுறை என்ற முறையில் தூய்மைப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். ஆனால் காகிதப்பட்டறை, எல்.ஐ.சி. காலனி, முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் சரிவர வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிப்பதில்லை. தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராக்கேஷ், காகிதப்பட்டறை வேலூர்.