அரக்கோணம் சுவால்பேட்டை தாசில்தார் தெரு மற்றும் மேலாண்ட ஒப்பணக்கார தெருக்களில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கால்வாயில் கழிவு நீர் சரியாக வெளியேறாமல் சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவு நீர் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம் மோகன், அரக்கோணம்.