வேலூர் தெற்குக் காவல் நிலையம் பில்டர்பெட் சாலை அருகே தெரு ஒன்று உள்ளது. அந்தத் தெருவில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு குப்பைகள் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடக்கிறது. மேலும் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி நிர்வாகம் இதனை கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.