சாலையோரம் குவியும் குப்பைகள்

Update: 2023-12-03 17:40 GMT

வேலூர் கொணவட்டத்தை அடுத்த சதுப்பேரி ஏரி அருகே சர்வீஸ் சாலை ஓரம் குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், கொணவட்டம், வேலூர்.

மேலும் செய்திகள்