திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் வீடுகளின் வாசல்களுக்கு வந்து விடுகின்றன. மேலும் சில சமயங்களில் துர்நாற்றமும் வீசுகிறது. தற்போது வேங்கிக்கால் ஊராட்சி திருவண்ணாமலை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ளது. வேங்கிக்கால் பகுதியில் அரசு அலுவலர்கள் பலர் வசித்து வருகின்றனர். இருப்பினும் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
-ராம், திருவண்ணாமலை.