குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2024-05-05 16:55 GMT

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் இருந்து புறவழிச்சாலை சந்திப்பு வரை சாலை ஓரம் குப்பைகள் குவியல் குவியலாக குவிந்து காணப்படுகிறது. சில சமயங்களில் காற்றினால் சாலை ஓரம் உள்ள குப்பைகள் வாகன ஓட்டிகள் மீது பறந்து வந்து விழும் அவல நிலையும், அந்தப் பகுதிகளில் துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

- ராஜா. திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்