கலவை-திமிரி செல்லும் சாலையில் ஒத்தவாடை வீதி அருகே கழிவுப் பொருட்களும், குப்பைகளும் மலைபோல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக அரசு பொது மருத்துவமனைக்கு செல்வோர் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே இந்தச் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகளை அகரம் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக அகற்ற முன்வர வேண்டும்.
-வெள்ளைதேவன், சமூக ஆர்வலர், கலவை.