திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்ரோடு அருகில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் வழியில் குப்பைகள், கழிவுகள் கொட்டி வைக்கப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் உடனே குப்பைகள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.அண்ணாதுரை, கீழ்கொடுங்காலூர்.