வேலூர் சங்கரன்பாளையம் முத்துப்பிள்ளைதெருவில் ஏராளமான குப்பைகள் கிடக்கிறது. குப்பைகள் காற்றில் பறந்து கால்வாயில் விழுவதால் கழிவுநீர் தேங்கி ஓடாமல் நிற்கிறது. மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை முறையாக சேகரிக்க வேண்டும். எங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் கொசு தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
-தினேஷ், சங்கரன்பாளையம் வேலூர்.