வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்பக்கம் உள்ள பாலாற்றில் மலை போல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்தக் குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்து செல்கின்றனர். இதனால் தீ கொழுந்து விட்டு எரிந்து, அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்படுகிறது. எனவே பாலாற்றில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-இமானுவேல், வேலூர்.