ஆண்டியப்பனூர் அருகே ஆங்காங்கே சாலையோரம் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால், அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைக்கொட்டுவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இல்லையேல், கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொன்ராஜ், ஆண்டியப்பனூர்.