சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2025-03-23 16:40 GMT

காட்பாடி காந்தி நகர் 19-வது கிழக்கு மெயின் ரோட்டில் மண்ணும், மாட்டுச்சாணம், குப்பைக் கூளங்கள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதன் அருகில் முள் புதர்களும் வளர்ந்துள்ளது. 40 அடி அகலம் கொண்ட சாலை, தற்போது 10 அடி‌ அகலம் கூட இல்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பப்பட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. சுகாதார சீர்கேடால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையை ஆக்கிரமித்துக் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும், அதன் ஓரம் வளர்ந்துள்ள முட்புதர்களையும் அகற்றி சுத்தம் செய்ய வேண்டுகிறோம்.‌

-கருணாகரன், காட்பாடி. 

மேலும் செய்திகள்