சோளிங்கரை அடுத்த கூடலூர் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அனைத்துக் குப்பைகளையும் நீர் நிலையான ஏரி பகுதியில் கொட்டி மாசுப்படுத்துகின்றனர். எனவே ஏரிக்கரையோரம் கொட்டப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
-அர்ச்சுனன், கூடலூர்.