ஆரணி நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்கா குப்பைகளை உரம் தயாரிக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் கமண்டல நாக நதி ஆற்றிலேயே கொட்டுகிறார்கள். இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. கமண்டல நாக நதியில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-பன்னீர்செல்வம், ஆரணி.