வேலூர் அருகில் உள்ள சதுப்பேரி ஏரி சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. சமீபத்தில் பெய்த மழையால் ஏரியில் தற்போது அதிக தண்ணீர் உள்ளது. ஏரியில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மர்மநபர்கள் வாகனங்களில் கட்டிட கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதைக் கண்காணித்து குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், வேலூர்.