குப்பைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Update: 2025-12-07 19:23 GMT

காட்பாடி கழிஞ்சூர் அண்ணாமலை நகர் பகுதிக்கு செல்லும் மெயின் சாலையோரம் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு அதிக போக்குவரத்து உள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகள் காற்றில் சாலையில் பறந்து வந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

-ராம்சரண், கழிஞ்சூர்.

மேலும் செய்திகள்