வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் சேரும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். ஆனால் சில இடங்களில் சாலையோரத்தில் காணப்படும் குப்பைகளுக்கு தூய்மை பணியாளர்களே தீ வைக்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே குப்பைகளுக்கு தீ வைக்கும் பணியாளர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவா, காகிதப்பட்டறை.