வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அந்தக் கால்வாயை ஊழியர்கள் சுத்தம் செய்து அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அவ்வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது பிளாஸ்டிக் கழிவுகள் சாலையில் பறந்து சென்று மோட்டார் சைக்கிளில் வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.