திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையோரம் காக்கங்கரை ஏரி உள்ளது. இந்த ஏரியில் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் மாசுபடுவதால் நிலத்தடி நீரும் சீர்கெட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத், காக்கங்கரை.