அரக்கோணம் உப்புகுளம் அருகே சாவடி தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை எதிரில் சிலர் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. அங்கு கொட்டப்படும் கழிவுகளை ஆடு, மாடுகள் உண்பதற்கு நிற்பதால் அந்த வழியே செல்பவர்களுக்கு இடையூறாகவும், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அங்கு குப்பைகளை கொட்டாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சசிகுமார், அரக்கோணம்