ஏரியில் குப்பைகள் கொட்டும் அவலம்

Update: 2023-02-26 17:06 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பனூர் ஏரி உள்ளது. இது, திருப்பத்தூர் டவுன் பகுதியை ஒட்டி உள்ளது. இந்தப் பகுதிகளில் கோழிக்கழிவுகள், குப்பைகள் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஏரி மாசு அடைகிறது. உடனடியாக இந்தப் பகுதியில் கேமராக்களை பொருத்தி குப்பைக் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்