தூர்வாரும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்

Update: 2025-04-20 14:27 GMT

வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை வாரி கால்வாய் அருகில் போட்டு விட்டு, பின்னர் அதை அப்புறப்படுத்துவர். ஆனால் எங்களது 4-வது வார்டான செங்குட்டை மாரியம்மன் கோவில் தெருவில் கால்வாயில் இருந்து அகற்றும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் ஆகியவையை கால்வாய் அருகிலேயே போட்டுவிட்டு அப்புறப்படுத்தாமல் விடுகின்றனர். இதனால் மீண்டும் குப்பைகள் கால்வாயில் விழுந்து அடைத்துக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?

-பி.துரை, செங்குட்டை. 

மேலும் செய்திகள்