குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் மேல்பட்டி சாலையோரம் குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். அந்தக் குப்பைகளை மாடுகள் கிளறி விடுகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் மாடுகள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், குடியாத்தம்.