வேலூர் மாநகராட்சி வார்டு எண் 1-ல் கல்புதூர் மற்றும் ராஜீவ் காந்தி நகர் மக்கள் பயன்பாட்டுக்கான மயானம் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் உள்ளது. இங்கு இறந்தவர்களை அடக்கம் செய்வதும் தகனம் செய்வதும் நடந்து வருகிறது. ஆனால் மயான பகுதியில் சுற்று வட்டாரங்களில் இருந்து கொண்டு வரப்படும் கோழி கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் மயானத்துக்கு வரும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். இங்கு கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி. துரை, கல்புதூர், காட்பாடி.